முகப்பு

முழக்கம் :

“சான்றாண்மை இவ்வுலகில் தோன்றத் துளிர்த்த தமிழ்
மூன்றும் செழித்ததென்று கொட்டு முரசே!” — பாரதி தாசன்

நோக்கம் & குறிக்கோள்: 

  • மன்னார் மாவட்டத்தில் உள்ள கலைஞர்கள், இலக்கியவாதிகள், அறிஞர்கள். கலை இலக்கிய ஆர்வலர்கள், சுவைஞர்கள் போன்றோரை அமைப்பு ரீதியாக ஒருங்கிணைத்து மாவட்டத்தின் கலை இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுத்தல், மேம்படுத்தல்.
  • தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்க் கவின் கலைகள் என்பவற்றின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உழைத்தல்.

  • இவை தொடர்பான பாரம்பரியப் பண்பாட்டு விழுமியங்களைப் பேணிப் பாதுகாத்தல், பழைய கலை இலக்கிய வடிவங்களுக்குப் புத்துயிர் ஊட்டிப் பாதுகாத்தலும், வளர்த்தலும்.

  • இத்தகைய குறிக்கோள்களுடைய ஆர்வலர்களையும், நிறுவனங்களையும் ஊக்குவித்து ஒருங்கிணைத்துச் செயற்பட வைத்தல்.

  • பூகோள மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து மொழி வளர்ச்சிக்குத் தேவையான, பொருத்தமான புதுப்புதுத் தொழில்நுட்ப உத்திகளையும் கண்டுபிடிப்புக்களையும் உள்வாங்கி நடைமுறைப்படுத்தக்கூடிய பொறிமுறைகளை உருவாக்குதல், ஊக்குவித்தல், அறிமுகம் செய்தல்.

  • ஏற்கனவே இத்துறைகளில் ஈடுபாடுள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி மன்னார் மாவட்டத் தமிழ் மொழி ஆர்வலர்களுக்கு உதவுதல், ஊக்குவித்தல்.

உறுப்புரிமை விபரம் :

ஆயுள்கால உறுப்புரிமை – ரூ. 2,000/=
சாதாரண உறுப்புரிமை ஆண்டுக்கு – ரூ.200/=
மாணவ உறுப்புரிமை ஆண்டுக்கு – ரூ.30/=

ஆயுட்கால உறுப்பினர் அல்லாத அனைவரும் ஆண்டுதோறும் தை 30க்கு முன்னதாக தத்தமது உறுப்புரிமைப் பணத்தைச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறியவர்கள் உறங்குநிலை உறுப்புரினர்களாகக் கருதப்படுவர். நிலுவைப்பணத்தை முழுமையாகச் செலுத்தாமல் உறுப்புரிமையைப் புதுப்பிக்க முடியாது. செலுத்தப்பட்ட உறுப்புரிமைப் பணம், நன்கொடை போன்றவற்றில் எவருமே உரிமை கோரமுடியாது.

உறுப்புரிமைப் படிவம்:
உறுப்பினர்கள் ஆக விரும்புவோர் படிவத்தை பதிவிறக்கம் செய்து ஆயுள்கால உறுப்பினர் ஒருவரின் பரிந்துரையுடன் பொருளாளரிடம் பணத்தைச் செலுத்தி உறுப்பினராகலாம்.

படிவத்தை பதிவிறக்க: membership form tamilsangam verson 2

சமூகவலைத்தளங்களில்:
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் முகப்புத்தக மூடிய குழுவில் (facebook Closed Group) உறுப்பினர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவார்கள். நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும், உறுப்பினர்களின் கருத்துகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளவும் இக்குழு உதவும்.

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் கலை, இலக்கிய செயற்பாடுகள் குறித்த இலவச குறுந்தகவலை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Follow mnrtlsm என தட்டச்சு செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்புங்கள்

நிதி மிகுத்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
ஆண்மை யாள ருழைப்பினை நல்கீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்…
இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்! #பாரதி

Leave a Reply